என் மலர்

  செய்திகள்

  ஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு - 9-ம் தேதி டோக்கியோவில் நடைபெறுகிறது
  X

  ஜப்பான், சீனா, தென்கொரியா உச்சி மாநாடு - 9-ம் தேதி டோக்கியோவில் நடைபெறுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிழக்காசிய நாடுகளான ஜப்பான், சீனா, தென்கொரியா பங்கேற்கும் உச்சி மாநாடு மே 9-ம் தேதி டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  டோக்கியோ:

  கிழக்காசிய கண்டத்தில் உள்ள ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும், நட்புறவை பலப்படுத்தவும் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றன.

  முதல் மாநாட்டை 2008-ம் ஆண்டு ஜப்பான் நடத்தியது. அதன்பிறகு, சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

  அதன்படி, இந்த ஆண்டின் உச்சி மாநாடு மே 9-ம் தேதி டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த மாநாடு தற்போது நான்காவது முறையாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 8-ம் தேதி ஜப்பானுக்கு வரும் சீன பிரதமர் லி கெகியாங் வரும் 11-ம் தேதி வரை இங்கு தங்குகிறார். ஜப்பான் மன்னர், அதிபர், பிரதமர் ஆகியோரை சந்திக்கும் அவர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #tamilnews
  Next Story
  ×