என் மலர்

  செய்திகள்

  சிரியா விவகாரம்: புதினை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ரஷியா சென்றார்
  X

  சிரியா விவகாரம்: புதினை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ரஷியா சென்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஆலோசனை நடத்துவதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று மாஸ்கோ புறப்பட்டுச் சென்றார். #Syria #BenjaminNetanyahu
  டெல் அவிவ்:

  சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராடிவரும் புரட்சிப் படையினரை ஒழிக்க ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் அதிபரின் படைகளுக்கு உதவியாக வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

  ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும் சிரியா விவகாரத்தில் ரஷியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து வருகிறது. இந்நிலையில், லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா போராளி குழுக்களும் ஈரான் படைகளும் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

  இதற்கு உதவியாக ஹிஸ்புல்லா போராளிகளுக்கு இஸ்ரேல் வழியாக கப்பல்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்படி வந்த சுமார் 100 ஆயுத கப்பல்களை இஸ்ரேல் கடற்படையினர் சிறைபிடித்தனர்.

  இதனால், சிரியாவில் தங்கள் நாட்டு படைபலம் மற்றும் ஆயுதபலத்தை ஈரான் அதிகப்படுத்தி, அங்கு நிரந்தரமாக காலூன்றி நிற்கக்கூடும். ஈரானின் இந்த முயற்சியின்மூலம், ஹிஸ்புல்லா இயக்கப் போராளிகள் இஸ்ரேலுக்கு எதிரான ஏவுகணை தாக்குதல் நடத்தும் மையப்பகுதியாக லெபனான் மாறிவிடக்கூடும் என இஸ்ரேல் அஞ்சுகிறது.

  இந்நிலையில், சிரியாவில் தங்கள் நாட்டு ராணுவத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்க இடைவிடாமல் முயற்சித்துவரும் ஈரான் அரசின் நிலைப்பாடு தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஆலோசனை நடத்துவதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று மாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.

  முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெஞ்சமின் நேதன்யாகு, 'சிரியாவில் முகாமிட்டுள்ள இஸ்ரேலியப் படைகள் மற்றும் ரஷியா நாட்டின் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக நானும் ரஷிய அதிபர் புதினும் அவ்வப்போது ஆலோசித்து வருகிறோம்' என்று குறிப்பிட்டார்.  #Syria #VladimirPutin #Israel #BenjaminNetanyahu #Russia
  Next Story
  ×