என் மலர்
செய்திகள்

ஜெர்மனியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 17 பேர் பலி
ஜெர்மனியில் 48 பயணிகளுடன் சென்ற பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
முனிச்:
ஜெர்மனி பெய்ரூத் நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கிழக்கு லாஸ்ஸிட்ஸ் நகரில் இருந்து நியூரம்பெர்க் நோக்கி பேருந்தில் 48 பேர் சென்றுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு பவேரியன் அருகே கடும் போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருந்த லாரி மீது, பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 31 பேர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்றனர். தீக்கிரையான பேருந்து முற்றிலும் எரிந்தது. இதில் 17 பேர் உடல் கருகி பலியாகினர்.

Next Story