என் மலர்
தமிழக பட்ஜெட் - 2021
இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அத்தியாவசிய ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, படிப்படியாகத் தொடங்கப்படும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக அமையும். இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3,995 கோடி ரூபாய் மதிப்பில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம், 2021-22-ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக 2,470.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், மொத்தம் 1,634 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 815.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கான ஒதுக்கீடு, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், 15,863.37 கோடி ரூபாயிலிருந்து 2020-21 திருத்த மதிப்பீடுகளில் 18,458.27 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒதுக்கீட்டை உயர்த்தி, 2021-22-ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 19,420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வாரியங்களில் 26,67,355 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 2011-ம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரையில், புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட 84,32,473 பயனாளிகளுக்கு, நல நிதி உதவியாக 2,219.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
ஆவின் நிறுவனம் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 36.79 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வருகிறது. ஆவின் வரலாற்றிலேயே, 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதியன்று, அதிகபட்சமான அளவாக, நாளொன்றுக்கு 40.63 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆவின் மற்றும் மாவட்ட ஒன்றியங்களால் நாளொன்றுக்கு சராசரியாக 24.49 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் தளங்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு கணிசமான அளவில் மேம்படுத்தப்பட்டது. 2011-12ம் ஆண்டு முதல் இத்தகைய மூலதன பணிகளுக்காக, மொத்தம் 1,731.82 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 43 புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் தளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, 1,374.64 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மீன்வளத்துறைக்கான மூலதன செலவினஙக்ள் 580.97 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
ஜல் சக்தி அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட 2019-ம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளில், தமிழ்நாடு முதலிடத்தை வென்றுள்ளது.
2,639 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியுதவி ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
3,384 கோடி ரூபாய் செலவில் காவேரி உப வடிநிலத்தில் நீட்டித்தல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்கல் பணிகள், நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்துவதற்கு, நபார்டு வங்கி அனுமதித்துள்ளது. இத்திட்டத்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதியன்று தொடங்கி வைத்தார்.
933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன், கீழ் பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
1,652 கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கர் பரப்பளவு ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில், அத்திக்கடவு- அவிநாசி வெள்ளக் கால்வாய் திட்டம் 2021-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 565 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பணிகள் விரைவில் முடிவடையும்.
தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள, 56,909 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பயனடையும்.
காவேரி-தெற்கு வெள்ளாறு நதிகள் இணைப்பிற்காக 6,941 கோடி ரூபாய் மதிப்பில் கொள்கை அளவிலான ஒப்புதலை அரசு அளித்துள்ளது. முதல் கட்ட பணியாக, கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் செலவில் வெள்ள நீர் செல்லும் கால்வாய்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பாசனம் குறித்த பணிகளுக்கான மூலதன நிதி ஒதுக்கீடு, 2020-21-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 4,882.45 கோடி ரூபாயிலிருந்து 2020-21-ம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் 6,389.22 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 6,453.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இருந்து இன்றைய நாள் வரையில், கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
2020-21-ம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள், இந்தியாவில் முன்னணி முதலீட்டு இலக்காக தமிழ்நாடு திகழ்வதை மீண்டும் உறுதி செய்துள்ளன.
2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இருந்து இன்றைய நாள் வரையில், கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கி, 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக மொத்தம் 89 சதவீத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
குழந்தைகளுக்கு உயர்தர கல்வியை வழங்குவது இந்த அரசின் உயர்ந்த முன்னுரிமை ஆகும். எனவே பள்ளி கல்விக்காக அதிகபட்சமான ஒதுக்கீடாக, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்வதற்காக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடபுத்தகங்களை அரசு வழங்கியது. 12-ம் வகுப்புக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் 1,912 வீடியோ பாடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் 4,20,624 மாணவர்கள் பயன் அடைந்தனர்.
5,522 வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அரசின் சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. மாணவர்களுக்கான பாடங்கள் பல்வேறு இணையதளங்களில் மின்னணு தொகுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதுவரையில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவானது 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் தனிப்பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும்.

5 பகுதிகள் கொண்ட 133.87 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டம், 12 ஆயிரத்து 301 ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக வங்கியுடன் விரிவான கலந்துரையாடலுக்குப்பின் மாநகரக் கூட்டாண்மை ஒரு தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான ஒப்புதல் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், உலக வங்கியுடன் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறும்.
இத்திட்டம் மூன்று கட்டங்களாக ஏழாண்டு காலத்தில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 3,140 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும். இதில் உலக வங்கியின் நிதியுதவியாக 300 மில்லியன் அமெரிக்க டாலர் அடங்கும்.
2020-21-ம் ஆண்டில் 3,167.28 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகளுக்கும், 3,220.60கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளின் ஓடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும், 706 பாலங்கள் மற்றும் சிறுபாலங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கும் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
உலக வங்கி நிதியுதவியுடன் ‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்’ இரண்டாவது கட்டம் 5 ஆயிரத்து 171 ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 6 ஆயிரத்து 448 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள்:-
* விபத்து, ஆயுள் காப்பீட்டு திட்டம் எல்.ஐ.சி., யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து துவக்கம்
* குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும்
* நிரந்தர இயலாமைக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்
* வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாம் வழங்கப்படும்.
* சட்டம் ஒழுங்கிற்கு ரூ.9567 கோடி ஒதுக்கீடு
* சமூக நலத்துறைக்கு ரூ.1953 கோடி ஒதுக்கீடு
* கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு
* காவல் துறையை நவீனப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
* 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும்
* கோவை மெட்ரோ ரெயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
* இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்வு
* மேட்டூர் அணை திறப்பால் 4.1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி
* கால்நடைகளுக்காக அம்மா அவசர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது
* மினி கிளினிக்கிற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஊக்குவிப்பு
* மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு
* சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவு அவினாசி திட்டம் விரைவில் நிறைவு பெறும்
* தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் மார்ச் 2022ல் நிறைவு பெறும்
வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி ரூபாய், நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய துறைகள் மற்றும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி வருமாறு:-
* சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு
* கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.13,350 கோடி செலவு
* வேளாண்மைத்துறைக்கு 1,738 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* நீர்வள ஆதாரத் துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* மீன்வளத் துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு
* நீதித்துறை நிர்வாகத்துக்கு 1,437 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* நெடுஞ்சாலை துறைக்கு ரூ.18,750 கோடி ஒதுக்கீடு
* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு
* 1580 கோடி ரூபாய் செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
2021-22ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து ரூ.43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய், காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் 12000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2000 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை:
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. சபாநாயகர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.
கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தனது வீட்டில் இருந்து பட்ஜெட் ஆவணங்களுடன் கலைவாணர் அரங்கிற்கு புறப்பட்டு வந்தார். முதலில் ஓமந்தூரார் அரசினர் விடுதி அருகே உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோவிலுக்கு விநாயகரை வழிபட்டார்.
அதன்பின்னர் 11 மணிக்கு கூட்டத்தொடர் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தை அடைந்த அவர், 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 11-வது முறையாகும்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது 3 மாத கால செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், அது தொடர்பாக நிதித் துறைச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார். மேலும், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுவும் கூடி, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும்.