என் மலர்

  செய்திகள்

  வாட்ஸ்அப் அப்டேட்: இரண்டு புதிய அம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்
  X

  வாட்ஸ்அப் அப்டேட்: இரண்டு புதிய அம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  புதுடெல்லி:

  ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு புதிய அம்சங்களும் வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.  

  புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் செயலியினுள் பயணர்கள் யூடியூப் வீடியோக்களை பார்க்க முடியும், அடுத்த அம்சம் வாய்ஸ் ரெக்கார்டிங்-ஐ லாக் செய்ய முடியும். முதற்கட்டமாக இந்த அம்சங்கள் ஐ.ஓ.எஸ். பயணர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அம்சம் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் பதிப்பில் மட்டுமே வழங்கப்படுகிறது.

  ஐ.ஓ.எஸ். 2.17.81 புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. சில ஐபோன் பயணர்களுக்கு ரெக்கார்டிங்களை லாக் செய்யும் வசதியும் சில பயணர்களுக்கு யூடியூப் அம்சம் வழங்கப்படாமல் உள்ளது. இரண்டு அம்சங்களும் படிப்படியாக வழங்கப்படுவதால் விரைவில் மற்ற பயணர்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வாட்ஸ்அப் வாய்ஸ் ரெக்கார்டிங் அம்சத்தை இயக்க, ரெக்கார்டிங் பட்டனை கிளிக் செய்து மேல் பக்கமாக ஸ்வைப் செய்ய வேண்டும், ரெக்கார்ட் செய்து முடித்த பின் குறுந்தகவலை அனுப்ப கோரும் பட்டன் அல்லது நிராகரிக்க செய்யும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த அம்சம் தற்சமயம் வரை வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். 2.17.81 பதிப்பில் வழங்கப்படுகிறது.

  புதிய அம்சம் வழங்கப்பட்டிருப்பதால், வாய்ஸ் மெசேஜ்களை ரெக்கார்டு செய்யும் போது ஸ்கிரீனை அழுத்தி பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ரெக்கார்டு அம்சத்தை அழுத்தி மேல்பக்கமாக ஸ்வைப் செய்தால் போதுமானது.

  இரண்டாவது அம்சம், வாட்ஸ்அப் ஸ்கிரீனை விட்டு வெளியே செல்லாமலே யூடியூப் வீடியோவினை பார்க்க வழி செய்கிறது. இதனால் மற்றவர்கள் அனுப்பும் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடியே பார்க்க முடியும். இதன் மூலம் வாட்ஸ்அப் தளத்தில் பயணர் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்த முடியும்.

  மேலும் வாட்ஸ்அப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்திற்கு மிக எளிமையாக மாற்றிக் கொள்ளக்கூடிய வசதியை விரைவில் வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
  Next Story
  ×