என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக-விடம் மாநிலங்களவை சீட் கேட்பீங்களா?- பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில்..!
    X

    அதிமுக-விடம் மாநிலங்களவை சீட் கேட்பீங்களா?- பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில்..!

    • தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம் காலியாகிறது.
    • அதிமுக சார்பில் 2 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

    பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    ஒரு எம்.பி.யை தேர்வு செய்த 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதன்படி அதிமுக இரண்டு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் அதிமுக-விடம் மாநிலங்களவை சீட் கேட்பீங்களா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் பதில் அளிக்கையில் மாநிலங்களவை தேர்தல், தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும். எங்களிடம் 4 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். தற்போது கூட்டணியில் உள்ளோம். அதிமுக-வுக்கு ஆதரவு என தலைமை கூறினால், அதிமுக-வுக்கு ஆதரவு கொடுப்போம்" என்றார்.

    Next Story
    ×