என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆர்வக்கோளாறுல மலையில கூட ஏறுவான்... தவெக நிர்வாகி பேசிய வீடியோ வைரல்
- சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
- தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், சேலத்தில் விஜய் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "5 மணி நேரம், 6 மணி நேரம் தளபதிக்காக நிப்போமா?..தண்ணி குடிக்க முடியாது, சாப்பாடு சாப்பிட முடியாது, ஆர்வக்கோளாறுல மலையில கூட ஏறுவா, நீங்கதான் அவன பாத்துக்கணும். நமக்கு முக்கியம்" என்று பேசியுள்ளார்.






