என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முல்லைப் பெரியாறு குறித்த காட்சி நீக்கப்படாவிட்டால் திரையரங்குகள் முற்றுகை- வேல்முருகன்
    X

    முல்லைப் பெரியாறு குறித்த காட்சி நீக்கப்படாவிட்டால் திரையரங்குகள் முற்றுகை- வேல்முருகன்

    • தமிழகம் நேசக்கரம் நீட்டும் நிலையில் கேரளா மட்டும் வன்மத்துடன் செயல்படுவது ஏன்?
    • தமிழர்களை இழிவுபடுத்தினால் எந்த எல்லைக்கும் செல்வேன்.

    எம்புரான் படத்தில் இடம் பெற்ற முல்லைப் பெரியாறு வசனம் தொடர்பாக காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து சட்டசபையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முல்லைப் பெரியாறு குறித்த காட்சி நீக்கப்பட்டு விட்டதாக முதலமைச்சர் கூறி உள்ளார்.

    * தமிழகம் நேசக்கரம் நீட்டும் நிலையில் கேரளா மட்டும் வன்மத்துடன் செயல்படுவது ஏன்?

    * எங்கள் கட்சியினர் தற்போது படம் பார்க்க சென்றுள்ளனர்.

    * முல்லைப் பெரியாறு குறித்த காட்சி நீக்கப்படாவிட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழர்களை இழிவுபடுத்தினால் எந்த எல்லைக்கும் செல்வேன். ஏற்கனவே வெடிகுண்டு வீசியதாக கைதானதை சுட்டிக்காட்டி மலையாள திரையுலகினருக்கு வேல்முருகன் எச்சரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×