என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சமூக நீதி கருத்தியலைக் காப்பது, கல்வி நிலையங்களை உருவாக்குவது திமுகவின் சாதனை- மு.க.ஸ்டாலின்
    X

    சமூக நீதி கருத்தியலைக் காப்பது, கல்வி நிலையங்களை உருவாக்குவது திமுகவின் சாதனை- மு.க.ஸ்டாலின்

    • மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.
    • மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

    சென்னை அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    விழாவில், தீரர்கள் கோட்டம் திமுக, திராவிட அரசியல் திராவிட அரசு இயல், முறைசெய்து காப்பாற்றும் முதல்மைச்சர் நூல்கள் வெளியிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மூன்று நூல்களும் திராவிட இயக்கத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.

    மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளுக்கு அடையாளமாக இருப்பதால் ஆதிக்கவாதிகளுக்கு திராவிட இயக்கம் எரிகிறது கசக்கிறது.

    நாம் திராவிட மாடல் என்று சொல்ல சொல்ல எரிகிறது, அவர்களுக்கு எரிய வேண்டும் என்று நாம் திரும்ப திரும்ப சொல்கிறோம்.

    திமுக நிச்சயம் நூற்றாண்டு விழா காலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்து தமிழகத்தை வெற்றிக்கு அழைத்து செல்லும்.

    கட்டுக்கோப்பாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை தீரர்கள் கூட்டம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது.

    அரசியலில் பலரும் சொகுசான வாழ்க்கையை எதிர்பார்த்து வருகிறார்கள். அரசியலில் எதிரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து உள்ளது.

    சமூக நீதி கருத்தியலைக் காப்பது, கல்வி நிலையங்களை உருவாக்குவது திமுகவின் சாதனை.திராவிட மாடல் அரசு அனைவருக்குமானது என்பதையே இந்த புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×