என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.விற்கான பிரசாரத்தை தொடங்கி விட்டார் ஆளுநர் - உதயநிதி
    X

    தி.மு.க.விற்கான பிரசாரத்தை தொடங்கி விட்டார் ஆளுநர் - உதயநிதி

    • ஆளுநரை தமிழ் கற்க வைத்ததே தமிழ்நாட்டின் போராட்டம் தான்.
    • எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் 2026-ம் ஆண்டு தேர்தலில் சங்கிகளை மீண்டும் விரட்டி அடிப்போம்.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா, நூல் வெளியீட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    * நமது நண்பரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கி விட்டார்.

    * பாசிச பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்வதாக நினைத்துக்கொண்டு ஆளுநர் ரவி தி.மு.க.விற்கு பிரசாரம் செய்து வருகிறார்.

    * தமிழ்நாடு யாருடன் போராடும் என கேள்வி எழுப்பி உள்ளார் ஆளுநர்.

    * தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து போராடும் என ஏற்கனவே கூறிவிட்டேன்.

    * தமிழை பயின்று வருவதாக கூறி இருக்கிறார் ஆளுநர்.

    * ஆளுநரை தமிழ் கற்க வைத்ததே தமிழ்நாட்டின் போராட்டம் தான்.

    * நேரடியாக தமிழகத்தில் நுழைய முடியாமல் அ.தி.மு.க. தோள் மீது பா.ஜ.க. ஏறி வருகிறது. புதிதாக பலரையும் தேடிக் கொண்டுள்ளது.

    * எத்தனை கூட்டணி அமைத்து வந்தாலும் 2026-ம் ஆண்டு தேர்தலில் சங்கிகளை மீண்டும் விரட்டி அடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×