என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
    X

    சென்னையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    • கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
    • கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார்.

    சட்டசபை தேர்தலை சந்திக்க விஜயின் த.வெ.க. ஆயத்தமாகி வருகிறது. களத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பிரசார அணி ஆகியவை நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    இந்த கூட்டங்களில் தேர்தலில் வெற்றிக்காக எப்படி பணியாற்றுவது? பூத் கமிட்டிகளை எவ்வாறு அமைப்பது? தொண்டர்களை அரவணைத்து கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.

    முதல்கட்டமாக சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.சந்திரா அரங்கில் நடைபெறுகிறது.

    கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார். இதில் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

    அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    Next Story
    ×