என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓ.பி.எஸ்., ராமதாஸ் உடன் கூட்டணியா? - தவெக நிர்வாகி ராஜ்மோகன் விளக்கம்
    X

    ஓ.பி.எஸ்., ராமதாஸ் உடன் கூட்டணியா? - தவெக நிர்வாகி ராஜ்மோகன் விளக்கம்

    • தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
    • ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

    ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை என்று விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    ஜன நாயகன் விவகாரத்தில் ராகுல் காந்தி உடன்பட பல காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.

    அதே சமயம் பாமக நிறுவனர் ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், கூட்டணி தொடர்பாக இத்தகைய தகவல்களை தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தை பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு படுத்தி, கூட்டணி குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத்தின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை, இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" இரு தெரிவித்தார்.

    Next Story
    ×