என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்? - யாருக்கு எத்தனை இடம்?
    X

    அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்? - யாருக்கு எத்தனை இடம்?

    • மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
    • எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்தார்

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

    தமிழக பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.

    இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்.ஆகிய இருவரையும் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கும் இடங்களில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    அதாவது அதிமுகவுக்கு 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதமுள்ளவற்றில் பாஜகவுக்கு 23 தொகுதிகளும் பாமகவுக்கு 23 தொகுதிகளும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளும் அமமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒபிஎஸ்க்கு 3 தொகுதிகளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்படவுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×