என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வை எதிர்க்க விஜய் அச்சப்படுகிறார் - திருமாவளவன்
- பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக பேச வேண்டும்.
- நெருக்கடிக்கு ஆளாகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் விஜயின் அரசியல் கேள்விக்குறியாகும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் 'ஜனநாயகன்' திரைப்படத்தை முடக்குவதில் மத்திய அரசு வேகமாக செயல்படுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
* 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு அரசியல் தலையீடு இருக்கிறது என்ற விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
* அப்படி பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக பேச வேண்டும். பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் மௌனித்து இருக்கிறார்.
* அவரை தடுப்பது எது என்ற கேள்வி எழுகிறது. நீதிமன்றங்கள் மட்டுமே இதில் நெருக்கடி தருகிறதா? அல்லது பா.ஜ.க.வும் சேர்ந்து அவருடைய திரைப்படம் வெளியாகாமல் தடுப்பதற்குரிய நெருக்கடி தருகிறதா என்ற கேள்விக்கு விஜய் அவர்களால் மட்டும் தான் பதில் சொல்ல முடியும்.
* ஒன்று மட்டும் வெளிப்படையாக தெரிகிறது. அவர் பா.ஜ.க.வையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை, அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
* இந்த அச்சம் ஏன்? என்பதை மக்களிடையே அவர் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது.
* விஜயை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறது.
* விஜய்க்கு வியூகம் வகுத்து வரும் சிலரையும் பா.ஜ.க. அச்சுறுத்துவதாக தகவல் வருகிறது.
* நெருக்கடிக்கு ஆளாகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் விஜயின் அரசியல் கேள்விக்குறியாகும்.
* விஜய்க்கு பா.ஜ.க. நெருக்கடி தருகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராத கட்சிகளை பா.ஜ.க. மிரட்டி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






