என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'2026-ல் அதிமுக - பாஜக கூட்டணி சிறப்பாக வெற்றி பெறும்' - இபிஎஸ், பியூஸ் கோயல் கூட்டாக அறிவிப்பு!
- 2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம்.
- அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்
தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை கிண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் கோயல், இபிஎஸ் இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பியூஷ் கோயல், "சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடந்தது. 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினோம். மக்கள் பணிகள் குறித்தும் ஆலோசித்தோம். மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம். வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜகவின் இலக்கு.
2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை செய்தோம். வரும் 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார்.






