என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மூழ்கும் கப்பலுக்கு தே.மு.தி.க. கேப்டனாக சென்றுள்ளது- தமிழிசை சவுந்தரராஜன்
- தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
- விஜயகாந்த் அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு. தன் ரசிகர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு என பேசி வந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று பா.ஜனதா மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மூழ்கும் கப்பலுக்கு சென்றுள்ளார். விஜயகாந்த் அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு. தன் ரசிகர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு என பேசி வந்தார். அவருடைய கட்சி இந்த முடிவை எடுத்திருப்பது வருந்தத்தக்கது.
தொண்டர்களின் விருப்பம் என பிரேமலதா சொல்கிறார். தமிழக அரசியலில் கேப்டன் என தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டிருந்த ஒரு கட்சி மூழ்கும் கப்பலில் கேப்டனாக போனால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையாக உள்ளது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமங்களுக்கான அதிகார பகிர்வை கொடுக்காமல் அவர்கள் எப்படி மாநில உ மைகள் பற்றி பேசுகிறார்கள். தோல்வி பயத்தால் இன்று மாநில சுயாட்சியை கையில் எடுத்திருக்கிறார்கள்.
தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளது. பெண்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் 28 மாதங்கள் கொடுக்காமல் இப்போது கொடுக்கிறார்கள் என்றால் ஓட்டுக்காகத்தான்.
த.வெ.க. தலைவர் விஜய் வேலூர் வருகை தர இருப்பது குறித்து கேட்டதற்கு, அவர் வரட்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். எந்த உயிரும் போகக்கூடாது. உயிர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். வேலூருக்கு பிரதமர் மோடி வருகிறார். அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.க. கூட்டணிக்கு ஒரு கட்சி வந்து விட்டதால் தேசிய ஜனநாயக கூட டணிக்கு பெரிய இழப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அங்குள்ள காங்கிரஸ் அங்கேயே இருப்பார்களா? அல்லது விசிலிடம் போவார்களா? என தெரியவில்லை என கூறினார்.






