என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி... நான் அரசியல் சூப்பர் ஸ்டார்- சீமான்
    X

    திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி... நான் அரசியல் சூப்பர் ஸ்டார்- சீமான்

    • இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்.
    • நாங்கள் ஒரே ஒரு முறை தான் சந்தித்தோம்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்று மாவீரர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    நானும் ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் சந்தித்து பேசியது எங்க இரண்டு பேருக்கு தான் தெரியும். இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்க இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். புத்தக வெளியிடணுமா... பாட்டு வெளியிடணுமா... எல்லாத்துக்கும் அவரை கூப்பிட்டு கூடவெச்சிக்கணும். ஆனால் நாங்கள் ஒரே ஒரு முறை தான் சந்தித்தோம். அதற்குள் அய்யோ... அய்யோ.. என கூச்சல்.

    ஏன் தெரியுமா? அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார்... நாம அரசியல் சூப்பர் ஸ்டார்... இரண்டு ஸ்டாரும் சந்தித்ததில் பயம் வந்துடுச்சு என்றார்.

    முன்னதாக கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தை சீமான் சந்தித்து பேசியது தொடர்பாக பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை வெளிவந்த நிலையில், அதற்கு சீமான் பதில் அளித்துள்ளார்.

    Next Story
    ×