என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திமுக ஆட்சியில் 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா #DMK
    X

    திமுக ஆட்சியில் 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது- அமைச்சர் டி.ஆர்.பி ராஜா #DMK

    • தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் என அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.
    • மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது.

    உங்கள் கனவ சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிறப்புரையாற்றி வருகின்றனர்.

    அதன்படி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கனவு ஆட்சியை நடத்தி வருகிறார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

    மக்களிடம் இருந்து கற்றுக்கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அண்ணா சொன்னதை போலவே முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

    திமுக ஆட்சியில் 11.9 சதவீத பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றுள்ளது.

    தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் என அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்.

    மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது.

    2016 - 2021 ஆண்டுகளில் 4 சிப்காட் பூங்காக்கள் மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 33 சிப்காட் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    5 ஆண்டுகளில் 8 டைடல் பார்க் & டைடல் நியோ பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. 8 இடங்களில் பணிகள் நடக்கின்றன. 4 இடங்களில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×