சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு 26-ந்தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்

தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு 26-ந்தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை:

திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் இருந்து வருகிற 27-ந்தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். எனவே, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 365 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று மற்றும் நாளை திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களுக்கும் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும், வருகிற 26-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com