#CBI விசாரணைக்கு ஆஜராகிறேன்- செந்தில் பாலாஜி

முன்னுக்குப்பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்க உள்ளேன்.
#CBI விசாரணைக்கு ஆஜராகிறேன்- செந்தில் பாலாஜி
Published on

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையில் இருந்து விலக்கு அளித்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சி.பி.ஐ-க்கு விஜய் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பட்டது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்குப்பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com