என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன் - செய்தியாளர்களிடம் என்ன கூறினார்?
    X

    அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன் - செய்தியாளர்களிடம் என்ன கூறினார்?

    • மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றார்
    • இன்றைய அரசியல் சூழல் குறித்து பேசியதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

    அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    நேற்று மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

    இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், "டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழல் குறித்து அவர்களிடம் பேசினேன்.எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, அனைவரும் வலிமை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு என்னுடைய கருத்துக்களை அவர்களிடம் கூறினேன். ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் தொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தினேன்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×