என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு
    X

    அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்- செல்வப்பெருந்தகை அறிவிப்பு

    • உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை புரிய இருக்கிறார்.
    • தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற 'உள்துறை மந்திரி அமித்ஷாவே திரும்பிப் போ' என்ற கண்டனக் குரல் ஒலிக்கிற வகையில் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத்தில் இழிவுபடுத்தி பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை புரிய இருக்கிறார். அவருக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கிற வகையில், எனது தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற 'உள்துறை மந்திரி அமித்ஷாவே திரும்பிப் போ' என்ற கண்டனக் குரல் ஒலிக்கிற வகையில் ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×