என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தவெக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் நியமனம்!
- அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார்.
- தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கோரி இன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், தவெக நிர்வாகி அஜிதாவிற்கு அப்பதவி வழங்கப்படவில்லை. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜை நியமித்தார் அக்கட்சித் தலைவர் விஜய்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். அதன் ஒருபகுதியாக இன்று விடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியும் நேற்றே பரவியது.
இதனால் தனக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. விஜய் காரை மறித்தும் விஜய் இடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.






