என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒருத்தனுக்கு ஒருத்தின்னு என் பொண்ணு செத்ததும் பெருமைதான்- ரிதன்யாவின் தந்தைக்கு வலுக்கும் கண்டனம்
    X

    ஒருத்தனுக்கு ஒருத்தின்னு என் பொண்ணு செத்ததும் பெருமைதான்- ரிதன்யாவின் தந்தைக்கு வலுக்கும் கண்டனம்

    • ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.
    • ஒருத்தனுக்கு ஒருத்திதான்,மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என ரிதன்யா தெரிவித்திருந்தார்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது

    இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை சாப்பிட்டு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.

    அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, ஒருத்தனுக்கு ஒருத்தி தான் எனவே மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.

    இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், ஊடகத்திற்கு பேட்டி அளித்த பெண்ணின் தந்தை, "சிலர் மாற்று வாழ்க்கை அமைக்கிறாங்க, அமைக்கல என்பது அவரவர் விருப்பம். என் பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு செத்துட்டா. என் பொண்ணை இழந்தால்கூட எனக்கு அது பெருமையாகத்தான் இருக்கிறது.. இதே போல எல்லா பொண்ணுங்களும் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. தற்கொலை தீர்வாகாது. புகுந்த வீட்டில் பிரச்னை என்றால் அம்மா அப்பா கூடவே இருந்து விடுங்கள்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இணையத்தில் ரிதன்யா அப்பாவின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற பிற்போக்குத்தனமான கருத்தால் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வது ஒரு அப்பாவிற்கு பெருமை கிடையாது என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று கணவன் என்ன கொடுமை செய்தாலும் அவனை விட்டு பிரியாமல் விவாகரத்து செய்யாமல் குறிப்பாக இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் வாழ வேண்டும் என்று கூறுவது பிற்போக்கு தனமான கருத்தாகும். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அந்த உறவை முறித்துக்கொண்டு இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அனைத்து உரிமைகளும் உள்ளது என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×