என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், அவரது மனைவியும் எனது காலை பிடித்து அழுதனர் - ராமதாஸ்
- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என கூறினேன்.
- குடும்பத்தில் யாரும் அமைச்சராக வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
தைலாபுரம்:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அன்புமணி அடம்பிடித்ததாக ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
* பட்டாளி மக்கள் கட்சியை நான் பார்த்துகொள்கிறேன் என 6 வருடங்களுக்கு முன் அன்புமணி கூறினார்.
* அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நான் நீக்க போவதாக பொய் பேசினார்.
* பொய்யை கூசாமல் பேசுபவர் அன்புமணி.
* கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என அன்புமணி கூறியுள்ளார். இது இரண்டாவது பொய்.
* பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என கூறினேன்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி என அன்புமணி அடம்பிடித்தார்.
* பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், அவரது மனைவியும் எனது காலை பிடித்து அழுதனர்.
* எனக்கு 16 பஞ்சாயத்துகளை அன்புமணி தரப்பினர் வைத்தனர்.
* பா.ஜ.க கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளாவிடில் நீங்க எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்றார் அன்புமணி.
* அன்புமணியை தலைவராக்க 8 நாட்களில் பொதுக்குழுவை ஏற்பாடு செய்தனர்.
* அன்புமணி தான் தவறான ஆட்டத்தை தொடங்கியவர்.
* குடும்பத்தில் யாரும் அமைச்சராக வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
* அன்புமணியை மத்திய அமைச்சராக்க ஜி.கே.மணியும் ஆதரவு தெரிவித்தனர்.
* நான் கூட்டிய கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் அன்புமணி பேசியதாக ராமதாஸ் கூறினார்.






