என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெற்ற தாயின் மீது அன்புமணி பாட்டிலை தூக்கி அடித்தார் - ஆதங்கத்துடன் பேசிய ராமதாஸ்
- அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை.
- காடுவெட்டி குருவை கீழ்தரமாக நடத்தியது ஏற்க முடியாது.
தைலாபுரம்:
தருமபுரி பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசிய தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
* தருமபுரி, சேலத்திற்கு சென்ற போது நான் மைக்கில் பேசக்கூடாது என அன்புமணி கூறினார்.
* தங்கியிருக்கும் அறையில் இருந்து நான் நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என அன்புமணி ஆணையிட்டார்.
* அன்புமணி கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக பல செயல்களை செய்து வருகிறார்.
* அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை.
* காடுவெட்டி குருவை கீழ்தரமாக நடத்தியது ஏற்க முடியாது.
* முகுந்தன் விவகாரத்தில் பெற்ற தாயின் மீது அன்புமணி ராமதாஸ் பாட்டிலை தூக்கி அடித்தார்.
* நான் யாரையும் பார்க்க கூடாது என அன்புமணி எதிர்பார்க்கிறார்.
* தலைவர் என்பவர் அனைவரது கருத்துகளையும் கேட்க வேண்டும்.
* பாட்டாளி மக்கள் கட்சி யார் வளர்த்த கட்சி? என அன்புமணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே தொண்டரின் கடிதத்தை படித்து கொண்டிருந்த போது ராமதாஸ் கண்கலங்கி சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.






