என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என் தவறு: வளர்த்த கடாவே மார்பில் பாய்கிறது - ராமதாஸ் வேதனை
    X

    அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என் தவறு: வளர்த்த கடாவே மார்பில் பாய்கிறது - ராமதாஸ் வேதனை

    • அன்புமணி ராமதாசை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு.
    • 4 சுவற்றிற்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்?

    தைலாபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தான் செய்த தவறுகளை மறைத்து பட்டாளி மக்கள் கட்சியினரையும், மக்களையும் திசை திருப்ப அன்புமணி முயற்சி செய்கிறார்.

    * கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார்.

    * முகுந்தன் இளைஞரணி தலைவராக்கப்பட்டபோது மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?

    * அன்புமணி கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக பல செயல்களை செய்து வருகிறார்.

    * அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என பலரும் வருந்தினார்கள்.

    * அன்புமணி ராமதாசை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு.

    * அன்புமணி தான் தவறான ஆட்டத்தை தொடங்கியவர். மேடை நாகரீகம், சபை நாகரீகத்தை கடைபிடிக்காதவர் அன்புமணி.

    * மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு அன்புமணி இருந்தது சரியா? மைக்கை தூக்கி தலையில் போடுவது போல் அன்புமணி செயல்பட்டார்.

    * பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்?

    * 4 சுவற்றிற்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்?

    * கசப்பான வார்த்தைகளை பதிலாக கொடுக்கும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

    * எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவே மார்பில் வீறு கொண்டு பாய்கிறது என்று வேதனையுடன் கூறினார்.

    Next Story
    ×