என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நான் உருவாக்கிய கட்சி எனக்கூறிய ராமதாஸ்: மைக்கை எறிந்து விட்டு சென்ற அன்புமணி- பொதுக்குழுவில் மோதல்
    X

    நான் உருவாக்கிய கட்சி எனக்கூறிய ராமதாஸ்: மைக்கை எறிந்து விட்டு சென்ற அன்புமணி- பொதுக்குழுவில் மோதல்

    • எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறினார்.
    • முகுந்தன் என்பவர் அன்புமணியின் சகோதரி மகன் ஆவார்.

    புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

    முகுந்தன் என்பவரை மாநில இளைஞரணி தலைவராக நியமித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார்.

    நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார்.

    எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

    அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார்.

    சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார்.

    பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார்.

    முகுந்தன் என்பவர் அன்புமணியின் சகோதரி மகன் ஆவார்.

    Next Story
    ×