என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
    X

    அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

    • பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியம் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2024-25-ம் ஆண்டிற்கான C,D பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன்படி, C,D பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 மிகை ஊதியமாகவும் C,D பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.

    இதற்காக C,D பிரிவு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர், முன்னாள் கிராம அலுவலருக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.183.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தொகுப்பு ஊதியம், காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 மிகை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×