என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு விதித்த கெடு இன்றுடன் நிறைவு: அன்புமணி மீது நடவடிக்கை பாயுமா?
- அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.
- நாளை பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடுகிறது.
பா.ம.க.வில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. டாக்டர் ராமதாஸ் மீது அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 19-ந் தேதி பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர்.
இன்றுடன் அந்த கெடு முடிவடைய உள்ள நிலையில், அன்புமணி இதுவரை எந்த பதிலும் அளிக்காததால் இதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நாளை பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் கூடுகிறது.
இந்த நிலையில், இன்று சமூக ஊடகப் பேரவை கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து நிர்வாக குழு கூட்டம், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் என 6 நாட்களுக்கு தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






