என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க.-வின் நீதிப்பேரணிக்கு அனுமதி மறுப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பா.ஜ.க.-வின் நீதிப்பேரணிக்கு அனுமதி மறுப்பு

    • அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதாக கூறியும் தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாபாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெற உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார்.

    இந்த பேரணியானது நாளை தொடங்கி சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக கவர்னரை சந்தித்து, பாஜ.க. மகளிர் அணி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், பா.ஜ.க.வின் நீதி பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக நடத்த இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×