என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பஹல்காம் தாக்குதல்: சிகிச்சை பெற்று வரும் பரமேஸ்வரனிடம் நலம் விசாரித்த முதல்வர்
- பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார்.
டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்ற நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து, பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
Next Story






