ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தொடங்கிவிட்டார் - டிடிவி தினகரன்

அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டது நியாயமான நடவடிக்கை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஓ.பி.எஸ். தீங்கு செய்துவிட்டார்.
ஓ.பி.எஸ். தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தொடங்கிவிட்டார் -  டிடிவி தினகரன்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், "ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது, இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். தி.மு.க.வின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்"

தி.மு.க.வில் இணைவீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "பொறுத்து இருந்து பாருங்கள்" என்று தெரிவித்தார். தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காதது, ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க. ஆதரவு மனநிலையில் இருப்பதன் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தொடங்கிவிட்டார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், " ஓபிஎஸ் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தொடங்கிவிட்டார். அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டது நியாயமான நடவடிக்கை என இப்போது தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு தீங்கு செய்துவிட்டார்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com