என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முகத்துவாரத்தில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் பணிகளை முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
Next Story






