என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - விஜய்
- இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
- 4 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது.
இந்த சமபவத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் வரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே விலைமதிப்பற்ற மனித உயர்களை பறித்த கார் வெடிப்புச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனம்கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Next Story






