என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சம்பளம் வழங்க அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா? நயினார் நாகேந்திரன்
- அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை இன்னும் வழங்கப்படவில்லை.
- விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு?
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை வழங்கக்கூட அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?
தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் ஆசிரியர்களின் நலனை திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளும் என்றால் அதை செய்யவும் எங்கள் தமிழக பா.ஜ.க. தயாராக உள்ளது! விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு? என்று வினவியுள்ளார்.
Next Story






