என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'11 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.14 லட்சம் கோடி நிதி அளித்துள்ளார் மோடி' - நயினார் நாகேந்திரன்!
- மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது.
- திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் வரவேற்றுப் பேசிய நயினார் நாகேந்திரன்,
"மோடி சென்னைக்கு வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது. தே.ஜ.கூட்டணி கூட்டம் நடக்கிறது; சூரியன் இல்லவே இல்லை. இந்த இயக்கம் மாபெரும் இயக்கம். ஆட்சி மாற்றம் நிச்சயம் உறுதி. அதற்காக வேலையை பிரதமர் மோடியும், இபிஎஸ்-ம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றமுடியவில்லை. சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை ஒழிக்க வேலை நடந்துகொண்டிருக்கிறது.
11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு தந்துள்ளார்கள். 11 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். இந்த 11 ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு நிதி அளித்துள்ளார்" என தெரிவித்தார்.






