என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
- என்னை புதுமனை புகுவிழாவிற்கு அழைத்தவரின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம்.
- எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கமானவர்தான்.
தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவிற்கு, த.வெ.க. நிர்வாகி பண மாலை அணிவித்து பின் மன்னிப்பு கேட்ட நிலையில் இதுதொடர்பாக எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என்னை புதுமனை புகுவிழாவிற்கு அழைத்தவரின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். அவர் அண்ணன், தம்பிகள் எல்லாம் தி.மு.க.வில் உள்ளனர். எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கமானவர்தான். சென்ற முறை எனக்கு ஓட்டு போட்டவர் தான். அவர்கள் வீடு கட்டி புதுமனை புகுவிழாவிற்கு, ஐயா நீங்கள் வந்துதான் ஆக வேண்டும் என்று சொன்னார்கள்.
நான் பொதுவாக கட்சி பார்ப்பதில்லை. திருவண்ணாமலையை பொறுத்தவரை யார் எனக்கு வந்து அழைப்பிதழ் கொடுத்தாலும் சரி, நான் அந்த சட்டமன்ற உறுப்பினர். எனக்கு யார் வாக்களித்தார்கள். வாக்களிக்கவில்லை என்று பார்க்க முடியாது.
என்னை மதித்து அழைத்ததின்பேரில் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி விட்டு வந்தேன். அவ்வளவுதான். அவர் என்ன செய்தார் என்று என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் என்று கூறினார்.






