என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நியாயமான, வெளிப்படைத்தன்மையான தேர்தலை நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையரிடம் ஜெயக்குமார் வலியுறுத்தல்
    X

    நியாயமான, வெளிப்படைத்தன்மையான தேர்தலை நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையரிடம் ஜெயக்குமார் வலியுறுத்தல்

    • அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும்.
    • வாக்குச்சாவடி மையங்களின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

    சென்னை எம்.ஆர்.சி. நகரில் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு குறித்து இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

    அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் 12 நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

    தேர்தல் முன்னேற்பாடு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் உடனான ஆலோசனைக்குப் பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நியாயமான, வெளிப்படைத்தன்மையான தேர்தலை நடத்த வேண்டும்.

    * தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் காட்டக்கூடாது.

    அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும்.

    * வாக்குச்சாவடி மையங்களின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

    * தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட 17சி படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார்.

    Next Story
    ×