என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"பாஜக நினைத்திருந்தால் விஜய் இன்று வெளியே வந்திருக்க முடியாது" - ஹெச்.ராஜா அதிரடி!
- நாங்கள் எப்போதும் ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கமாட்டோம்.
- சம்பவம் நடந்தன்று நிகழ்விடத்தில் இருந்தவர் விஜய்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள, அவரது கடைசிப்படம் எனக்கூறப்படும் ஜனநாயகன் பொங்கலை முன்னிட்டு நாளை(ஜன.9) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்று விவகாரத்தால் நாளை வெளியாக முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
டிச.19 அன்றே படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் கருத்து தெவித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் ஹெச்.ராஜாவிடம், கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ சம்மன், தற்போது தணிக்கை சான்றிதழ் இழுபறி இவையெல்லாம் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக கொடுக்கப்படும் நெருக்கடிகளா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,
"தணிக்கைத் துறை ஒரு சுயதீன அமைப்பு. அவர்கள் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவார்கள். பாஜக நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் செப்.27-லேயே கொடுத்திருக்கும். மனிதாபிமானத்தோடு மத்திய அரசு செயல்பட்டது. பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் இன்று விஜய் வெளியே வந்திருக்கமாட்டார். நாங்கள் எப்போதும் ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கமாட்டோம். கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சம்பவம் நடந்தன்று நிகழ்விடத்தில் இருந்தவர் விஜய். அதனால் விசாரணைக்கு அவரை அழைத்திருப்பர். வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை.






