என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் SIR நடத்துனா இதுவும் இந்தி பேசுற மாநிலமா மாறிடும்- சீமான்
- சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்.
- வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு.
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வடமாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி பேர் வேலைக்கு என தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நீங்கள் வாக்குரிமை கொடுத்துவிடுவீர்கள். அப்படி வாக்குரிமை கொடுத்துவிட்டால் தமிழ்நாடு இன்னொரு இந்தி பேசும் மாநிலமாக மாறும்.
இங்கு பல்வேறு தரப்பட்டு மக்கள் இருந்தாலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தி என்கிற ஒரே மொழியில் ஒற்றுமையாக நின்றுவிடுவார்கள். அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள்.
வடமாநிலத்தவர்களை தவிர்க்க முடியாத தொழிலாளியாக இங்கு அமர்த்தி, நம்மை இங்கு இருந்து விரட்டுவார்கள். அவர்களிடம் என்னுடைய அரசியலும், அதிகாரமும் போய்விட்டது என்றால் நான் இந்த நிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய அகதியாக மாற வேண்டிய சூழல் ஏற்படும்.
அதற்கு முன்பே நாம் எச்சரித்துக் கொள்ள வேண்டும். வா, இரு, வேலை செய்.. வாக்கை சொந்த ஊரில் போய் செலுத்திவிடு.. சிறப்பு வாக்குரிமை என்று அவர்களுக்கு கொடுத்துவிட்டால் நாம் தெருவில்தான் நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






