என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய்யையும் விமர்சிப்பேன்.. தவெகவில் உள்ள அல்லு சில்லுகளுக்கும் கடுமையாக பதிலடி தருவேன் - அண்ணாமலை
    X

    'விஜய்யையும் விமர்சிப்பேன்.. தவெகவில் உள்ள அல்லு சில்லுகளுக்கும் கடுமையாக பதிலடி தருவேன்' - அண்ணாமலை

    • தவெகவோ அல்லது விஜய்யோ அக்கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும்
    • விஜய்யின் பேச்சு ஒரு ஆழம், ஒரு சிந்திக்க வைக்கக்கூடிய, எதற்காக அவருக்கு ஓட்டுப்போட வேண்டும், எதற்கு மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இல்லை.

    மதுரையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

    "நான் இன்னும் விஜய்யையும், தவெகவையும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை. ஏனெனில் தமிழ்நாடு அரசியலில் என்றும் என் பேச்சை மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை. தவெக தொடங்கிய முதல்நாள் நான் கூறிய கருத்தையே மீண்டும் கூறுகிறேன். அரசியலுக்கு புதிய ஆட்கள் வரவேண்டும். அவர் பாதையில் அவர் போகட்டும். ஆனால், தவெகவோ அல்லது விஜய்யோ அக்கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும். விஜய்யையும் நான் விமர்சிப்பேன்.

    இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, நான்கு கட்சிகள் மாறிவந்தவர்களை வைத்துக்கொண்டு விஜய் பேசினால், அதே விஜய்க்கு அதே பாணியில் பதிலளிக்க எனக்குத் தெரியும். அரசியல் களம் நாகரீகமாக இருக்கவேண்டும். இதை ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளட்டும்.

    எம்.எல்.ஏ.பழனியாண்டிமீது நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறது என்று அர்த்தம். எங்கள் கூட்டணி என்ன, கூட்டணித் தலைவர் யார் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். விஜய் கைதட்டல் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்வார்.

    விஜய்யின் பேச்சு ஒரு ஆழம், ஒரு சிந்திக்க வைக்கக்கூடிய, எதற்காக அவருக்கு ஓட்டுப்போட வேண்டும், எதற்கு மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இல்லை. தமிழ்நாட்டில் முதலமைச்சர் யார், எதிர்க்கட்சித் தலைவர் யார், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால் அவரது பேச்சை கடந்துபோய்விட வேண்டும். ஓட்டுக்காக திருப்பரங்குன்றம் பிரச்சனையை உருவாக்கியதே திமுகதான். ஆனால் இன்று மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பலி ஆடாக இருக்கின்றனர்.

    தொண்டர் மீது நடவடிக்கைகூட எடுக்க முடியாதவர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ளார். எதற்கெடுத்தாலும் டெல்லியை எதிர்பார்க்கும் நிலையில் இருப்பதால்தான் காங்கிரஸ் வீழ்ந்தது." என தெரிவித்தார்.

    Next Story
    ×