என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தரையில நான் ஒரு ஜனநாயகன் இருக்கேன், என்ன கண்டுக்கல... சீமான் ஆதங்கம்
    X

    தரையில நான் ஒரு 'ஜனநாயகன்' இருக்கேன், என்ன கண்டுக்கல... சீமான் ஆதங்கம்

    • ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படவில்லை
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தணிக்கை துறையை கண்டித்து பதிவிட்டிருந்தார்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தணிக்கை துறையை கண்டித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த சீமான், "தணிக்கை துறை விருப்பு வெறுப்புக்கு ஏற்றமாதிரி செயல்படுகிறது. நான் நடித்த அடங்காதே படத்தில் நான் பேசிய வசனங்களை நீக்கி விட்டார்கள். அந்த படத்தில் 500 இடங்களுக்கு மேல் வெட்டி விட்டார்கள்.

    திரையில வர்ற ஜனநாயகன் பத்தி பேசிட்டு இருக்கீங்க'.. தரையில நான் ஒரு ஜனநாயகன் இருக்கேன். என்ன கண்டுக்க மாட்ரீங்க...

    ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக உடனே குரல் கொடுக்கும் முதலமைச்சர் ஏன் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு குரல் கொடுப்பதில்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×