என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி: பாஜக, அதிமுக, தேமுதிக பங்கேற்பு
- காங்கிரஸ், சிபிஎம், விசிக, போன்ற கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளன.
- ஆளுநரின் தேநீர் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
குடியரசு தினத்தையொட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ள ராஜ் பவனம் சார்பில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு ஒவ்வொரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
காங்கிரஸ், சிபிஎம், விசிக, தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேநீர் விருந்தை தமிழக அரசும் புறக்கணித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து தொடங்கியது. இதில், பாஜக, அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.






