என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!
    X

    த.வெ.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

    • 1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றினார்.
    • திமுகவில் இருந்து விலகி 'தமிழர் பூமி' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்,

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய இருபெரும் கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக தங்கள் கூட்டணிகளை வலுப்படுத்திய நிலையில், புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்யும் இன்று தனது கூட்டணி நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.

    கூட்டணி இருந்தாலும், இல்லை என்றாலும், தேர்தலை தனியாக நின்று ஜெயிப்போம் என செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, நிர்வாகிகள் கட்சி மாற்றம் மறுபுறம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் திமுக, மற்ற மாற்றுக் கட்சிகளை நாடிவருகின்றனர். கட்சி தாவுதலுக்கு பல காரணங்களையும் முன்வைக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போது தவெகவில் ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். 1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றினார். ஆலங்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி 'தமிழர் பூமி' என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார், பின் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது அந்த முகாமில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.

    Next Story
    ×