என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சரக்கு ரெயிலில் தீ விபத்து: அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து
    X

    சரக்கு ரெயிலில் தீ விபத்து: அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து

    • திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
    • அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது

    சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

    சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் கூறுகையில்,

    சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரெயிலில் 52 பெட்டிகள் உள்ளன. சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

    சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்த கர்நாடகா, கொங்கு மண்டலத்திற்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த அதிவிரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

    * சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு வந்தே பாரத் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    * காலை 6 மற்றும் 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், கோவை அதிவிரைவு ரெயில் சென்ட்ரலில் நிறுத்தப்பட்டுள்ளது.

    * மங்களூரில் இருந்து காலை 6.10 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய சென்ட்ரல் மெயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

    * நீலகிரியில் இருந்து சென்னைக்கு காலை 6.25 மணிக்கு வர வேண்டிய நீலகிரி அதிவிரைவு ரெயில் திருவாலங்காட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.

    * கர்நாடகாவிலிருந்து காலை 6.45 டணிக்கு சென்னை வரவேண்டிய காவிரி விரைவு ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

    * கோவையிலிருந்து காலை 7 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய சேரன் அதிவிரைவு ரெயில் அரக்கோணத்தில நிறுத்தப்பட்டுள்ளது.

    ரெயில் சேவை தடைபட்டதால் ரெயில் பயணிகள் பரிதவித்தனர்.

    Next Story
    ×