என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரை LIC  அலுவலகத்தில் தீ விபத்து.. பெண் மேலாளர் உயிரிழப்பு
    X

    மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து.. பெண் மேலாளர் உயிரிழப்பு

    • புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர்.
    • தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2 ஆம் தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்திவிட்டு இரவு 8.30 மணி அளவில் ஊழியர்கள் வீட்டுக்கு கிளம்பும்போது அலுவலகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

    தீ பரவத் தொடங்கியதை அடுத்து ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். ஆனால் சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கினர்.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடுமையாக போராடி தீயை அனைத்து உள்ளே சிக்கியர்வைகளையும் மீட்டனர்.

    ஆனால் நெல்லையை சேர்ந்த எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி (55) இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக உடல் கருகி உயிரிழந்தார். மேலும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அலுவலக உதவி நிர்வாக அதிகாரி ராம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏசி மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×