என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் எல்லாம் வெற்று விளம்பரம்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    X

    தி.மு.க. ஆட்சியில் எல்லாம் வெற்று விளம்பரம்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    • நகையை அடமானம் வைத்து நெல் சாகுபடி செய்ததாக கண்ணீர் வடிக்கின்றனர்.
    • விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாதது அரசின் கையாலாகாத தனம்.

    டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பை ஆய்வு செய்த பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக கொள்முதல் செய்யவில்லை.

    * சாலைகளில் நெல்லை கொட்டி வைத்து 20 நாட்கள் விவசாயிகள் காத்திருந்தனர்.

    * காட்டூரில் மட்டும் 4000 மூட்டைகள் சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    * திருவாரூர் வடுவூரில் 7500 மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யவில்லை.

    * தற்போது நெல்மணிகள் அனைத்தும் முளைத்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    * விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    * நாள் ஒன்றிற்கு 800 முதல் 900 நெல்மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    * கடந்த 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் கூறினர்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் தினமும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

    * நாள் ஒன்றிற்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் பொய் கூறுகிறார்.

    * விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாவிட்டால் எதற்காக அரசு இருக்கிறது.

    * நகையை அடமானம் வைத்து நெல் சாகுபடி செய்ததாக கண்ணீர் வடிக்கின்றனர்.

    * விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாதது அரசின் கையாலாகாத தனம்.

    * செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஆகஸ்ட் 18-ந்தேதியே மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது.

    * தி.மு.க. ஆட்சியில் எல்லாம் வெற்று விளம்பரமாகவே உள்ளது.

    * ஆதாரவிலையை உயர்த்தினாலும் இடு பொருட்கள் விலையும் உயரதானே செய்கிறது.

    * உற்பத்தி அதிகரிக்கும் போது அதற்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்களையும் அதிகரிக்க வேண்டும்.

    * கொள்முதல் செய்த நெல்லை கூட முழுமையாக பாதுகாக்க முடியாத அரசாங்கம்.

    * வேளாண் பட்ஜெட்டில் என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Next Story
    ×