என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இரட்டை இலை சின்னம் விவகாரம்- தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
    X

    இரட்டை இலை சின்னம் விவகாரம்- தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்

    • செங்கோட்டையன் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    • இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விரைந்து விசாரிக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார். கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.

    அவர் எழுதி உள்ள கடிதத்தில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த விரைந்து விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பது உண்மையான அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க.வின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க அவகாசம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×