என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழிசையுடன் புகைப்படம்.. வெல்லும் தமிழ் பெண்கள் என கேப்ஷனிட்ட திமுக எம்.பி. கனிமொழி
    X

    தமிழிசையுடன் புகைப்படம்.. "வெல்லும் தமிழ் பெண்கள்" என கேப்ஷனிட்ட திமுக எம்.பி. கனிமொழி

    • மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.
    • மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்ட ங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடி களில் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.

    மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார். இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டனர்.

    அப்போது அந்த விமானத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி NVN சோமு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.

    இந்த புகைப்படத்தை திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் வெல்லும் தமிழ் பெண்கள் என அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வைத்திருந்தார்.

    Next Story
    ×